பட வாய்ப்புக்காக இயக்குனர்கள் சிலர் தவறாக அழைத்ததாக கூறுகிறார் யாஷிகா ஆனந்த்.
துருவங்கள் பதினாறு படத்தில் அறிமுகமாகி இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தினால் பிரபலமாகியவர் நடிகை யாஷிகா ஆனந்த். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபற்றியிருந்தார்.
இந்நிலையில் யாஷிகா ஆனந்தின் கார் விபத்துக்குள்ளாகி நன்பி ஒருவர் உயிரிக்க யாஷிகா காயமடைந்து நடக்கமுடியாத நிலையில் இருந்தார். இப்போது நலமாகி படப்பிடிப்புகளில் கலந்துகொள்வதாக தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையில்
சினிமாவிற்கு வந்த காலத்தில் வாய்ப்புக்காக இயக்குனர்கள் சிலர் தவறாக அழைத்ததாகவும் இன்னும் சில இயக்குனர்கள் தவறான காட்சிகளை நடித்துக் காட்டுமாறு கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
எனினும் அவ்வாறு தவறாக அணுகிய இயக்குனர்களின் கோரிக்கையை மறுத்துவிட்டதாக பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார் யாஷிகா ஆனந்த்.