ஓமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்ட வலிமை! எப்போது ரிலீஸ்?
இந்த ஆண்டின் தொடக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியாக இருந்த மிகப்பெரிய படமாக தல அஜித்தின் ‘வலிமை’ இருந்தது. இந்தப் படத்தை பெரும் விலை கொடுத்து வினியோகஸ்தர்கள் வாங்கியிருந்தனர் இந்நிலையில் ஒமிக்ரோன் தொற்று வேகமாக பரவிவருவதையடுத்து தமிழக அரசு ஜனவரி 10-ஆம் தேதி வரை திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே அனுமதி என அறிவித்தது.
தமிழக அரசின் இந்த அறிவிப்பை அடுத்து கடைசி நேரத்தில் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ‘வலிமை’ எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமாகக் காத்திருக்கின்றனர். இந்நிலையில் மார்ச் மாதத்தில் வெளியாக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.