இன்று 1000 திரையரங்குகளில் வெளியாகிறது’வலிமை’!
நடிகர் அஜித் குமார் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘வலிமை’ திரைப்படம் இன்று வெளியாகிறது. கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட சட்ட நடைமுறைகள் காரணமாக பிற்போடப்பட்ட வலிமை இன்று திரைக்கு வருகிறது.
போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கியிருக்கும் இந்த படத்தில் ஹிமாகுரேசி, யோகி பாபு உட்பட முன்னணி நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். சுமார் 1000 திரையரங்குகளில் இன்று வெளியாகிறது வலிமை.சமூக வலைத்தளங்களில் வலிமை படத்திற்கு உற்சாக வரவேற்பை வெளிப்படுத்தி வருகின்றனர் ரசிகர்கள்.